'நீ கருப்பா இருக்க' கிண்டலடித்ததுடன் பிரிந்தும் சென்ற மனைவி - கணவன் செய்த காரியம்!
நிறத்தை காரணம் காட்டி கணவனை, மனைவி பிரிந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிற பிரச்னை
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரை சேர்ந்த தம்பதி விஷால் மோகியா (24). இவருக்கு கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமானது முதல் விஷால் மோகியா கருப்பாக இருப்பதாக கூறி அவரது மனைவி கிண்டல் செய்து வந்துள்ளார்.
மேலும், நிறத்தை காரணம் காட்டி அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து குழந்தையை கணவனின் வீட்டில் வைத்துவிட்டு மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
கணவன் புகார்
அவரை அழைத்து வருவதற்காக விஷால் மோகியா சென்றபோதும், நிற பிரச்னையை காரணம் காட்டி மனைவி வர மறுத்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து விஷால் மோகியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், தான் கருப்பாக இருப்பதால் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இருவரையும் அழைத்து கவுன்சிலிங் கொடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.