கணவனை காதலனுடன் சேர்ந்து எரித்த மனைவி - பகீர் பின்னணி!
கணவனை, மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
கர்நாடகா, குடகுவில் காஃபி தோட்டம் ஒன்றில் உடல் கருகிய நிலையில் ஒரு சடலத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்த விசாரணையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்துள்ளனர். இதற்கிடையில் நிஹாரிகா என்பவர் தனது கணவன் ரமேஷை காணவில்லை என புகாரளித்துள்ளார்.
இரு தரப்பு புகார்களும் ஒருங்கிணைந்து விசாரித்தபோது, பிரேத பரிசோதனை அறிக்கையில் நிஹாரிகா புகாரளித்த மூன்று, நான்கு நாட்களுக்கு முன்னர் அவர் உடல் எரிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. பின் ரமேஷ் ஹைதராபாத் உப்பலில் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
மனைவி வெறிச்செயல்
கணவர் ரமேஷிடம் 8 கோடி ரூபாய் கேட்டதாகவும், அவர் தர மறுத்ததால் கொன்றதாகவும் நிஹாரிகா ஒப்புக் கொண்டுள்ளார். தனது காதலன் நிகில் மற்றும் நண்பர் அங்கூருடன் சேர்ந்து கணவனை கொன்றுள்ளார்.
பின்னர் அவர்கள் காரில் 800 கிலோமீட்டர்கள் பயணம் செய்து, காபி எஸ்டேட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர். மேலும், அவர்கள் ரமேஷின் பணம் மற்றும் சொத்து ஆவணங்களைத் திருடியதாகக் கூறப்படுகிறது.
நிதி மோசடி தொடர்பாக ஹரியானாவில் நிஹாரிகா முன்பு கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலையான பிறகு நிஹாரிகா, ரமேஷை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.