தங்க சுரங்கத்தில் திடீர் தீ விபத்து - உடல் கருகிய நிலையில் 27 தொழிலாளர்கள் பலி!

United States of America Fire Accident
By Vinothini May 08, 2023 12:11 PM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

பெரு நாட்டில் திடீரென நடந்த தீ விபத்தினால் 27 தொழிலாளர்கள் உடல் கருகி இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்க சுரங்கம்

தென் அமெரிக்கா நாடான பெரு லாஎஸ்பெரான்சா மாகாணத்தில் உள்ள அரேக்யூபா நகரில் தங்க சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கம் கடந்த 23 ஆண்டுகளாக இயங்கி வந்தது. அந்த பகுதியில் உள்ள பல சுரங்கங்கள் சட்ட விரோதமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

gold-mine-fire-in-peru-27-were-dead

இந்த சுரங்கத்தில், சுமார் 300 அடி ஆழ பள்ளத்தில் நேற்று தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்பொழுது திடீரென தீ பற்றியதில் மளமளவென சுரங்கம் முழுவதும் பரவியது. உடனடியாக அங்கு இருந்த தொழிலாளர்கள் வெளியில் வர இயலவில்லை.

அதற்குள் விண்ணை முட்டும் அளவுக்கு கடும் புகை மூட்டமும் ஏற்பட்டது. இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர்.

பரிதாப பலி

இதனை தொடர்ந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர், இந்த விபத்தில் சிக்கி மூச்சு திணறியும், உடல் கருகியும் 27 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், உடல் கருகிய நிலையில் 2 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

gold-mine-fire-in-peru-27-were-dead

சம்பவம் பற்றி அறிந்ததும் பலியான தொழிலாளர்களின் உறவினர்கள் சோகத்துடன் அங்கு திரண்டனர். இறந்தவர்கள் உடலைப்பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

இந்நிலையில், இந்த விபத்திற்கு குறைந்த மின் அழுத்தம் கூட காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

பெரு நாட்டு வரலாற்றில் மிக மோசமான விபத்து இது என்றும் கூறுகின்றனர், இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.