கணவனுக்காக காலையில் விரதமிருந்த மனைவி - மாலையில் செய்த பகீர் செயல்!
கணவனுக்காக மனைவி விரதமிருந்து செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
வட இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகை "கர்வா சவுத்". இந்த நாளில் பெண்கள் சூரிய உதயம் முதல் சந்திரன் உதயம் வரை விரதமிருப்பார்கள். இதன்மூலம், தங்களது கணவர்களின் ஆயுள் கூடும் என்பது அவர்களின் நம்பிக்கை.
இந்த ஆண்டு இப்பண்டிகை நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் உத்தரப்பிரதேசம், இஸ்மாயில்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சவிதா. இவரது கணவர் ஷைலேஷ் குமார்.
மனைவி வெறிச்செயல்
இவர் தன்னுடைய கணவரின் நீண்ட ஆயுளுக்காக, விரதம் மேற்கொண்டுள்ளார். மாலையில் விரதம் முடிவடைந்து இருவரும் உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது சாப்பிட்டு கொண்டிருந்த ஷைலேஷ், திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரது சகோதரர் அகிலேஷ், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றுள்ளார்.
ஆனால், சிறிது நேரத்திலேயே ஷைலேஷ் உயிரிழந்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது உயிரிழந்தவரின் மனைவி வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "என்னுடைய கணவருக்கும், இன்னொரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்தது.
இந்த தகாத உறவு காரணமாகவே அவரை விஷம் வைத்துக் கொன்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் சவிதா கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, விரதம் முடிந்ததுமே, கள்ளக்காதல் விவகாரம் குறித்து கணவரிடம் சவீதா கேள்வி எழுப்பி பிரச்சனை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.