ஆசையாய் கேட்ட மனைவி; எல்லை மீறிய மோகம் - கணவனும், தாய்மாமனும் வெறிச்செயல்!
மனைவியை கணவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டா மோகம்
தூத்துக்குடி, கோட்டூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன். இவரது மனைவி சந்தன மாரியம்மாள். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கிருபை நகரில், ஒரு இடத்தை சொந்தமாக வாங்கிய பாலமுருகன், சந்தன மாரியம்மாளை அந்த வீட்டில் குடியிருக்க செய்துவிட்டு, கணவன் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுள்ளார். மனைவிக்காக 10 லட்சம் ரூபாயும், 50 பவுன் நகையும் வாங்கி தந்துள்ளார்.
ஆனால், மனைவி இன்ஸ்டாவில் ஃபோட்டோ, வீடியோ வெளியிடுவது என பிஸியாக இருந்துள்ளார். இதன் மூலம், பல ஆண் நண்பர்களுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், விடுமுறையில் வீடு திரும்பிய கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மனைவியிடம் பணம் கேட்டுள்ளார்.
கணவன் வெறிச்செயல்
அதற்கு அவர் பணம் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். அப்போதுதான் இன்ஸ்டாகிராமில் மனைவியின் நடத்தையை கண்டு ஆத்திரமடைந்த பாலமுருகன் தொடர்பு குறித்து கண்டித்துள்ளார். இது பெரும் தகராறாக வெடித்துள்ளது. இதனால், இருவரும் 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இதற்கிடையில், தாய்மாமா காளிமுத்து என்பவரிடம் ஏகப்பட்ட நகைகளை வாங்கி சந்தனமாரியம்மாள் ஏமாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் கோபத்தில் சந்தன மாரியம்மாளை கொலை செய்ய முடிவெடுத்து, வீலரில் வந்து கொண்டிருந்த சந்தன மாரியம்மாளை கழுத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
மேலும், 2 பேரும் காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளனர். தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.