கள்ளத்தொடர்பு - மாமியாருடன் சேர்ந்து மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்: அதிர்ச்சி சம்பவம்
தேனியில் வேறொருடன் தொடர்பு வைத்திருந்த மகளை தாய் தனது மருமகனுடன் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தம்பாளையம் அருகே ராயப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணகுமார்.
இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவியும், 8 வயதில் மகளும் உள்ளனர். கல்யாணகுமார் அப்பகுதியில் கட்டிட வேலை பார்த்து வந்த நிலையில், திடீரென ரஞ்சிதா உயிரிழந்துவிட்டதாக கூறி அவரின் சடலத்தை எரிக்க முயன்றுள்ளனர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அதில், ரஞ்சதிதாவிற்கும் வேறொருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதுடன், இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்ததும் கல்யாண்குமாருக்கு தெரியவந்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் கணவர் கண்டித்ததால், ரஞ்சிதா காதலனுடன் தங்கியதாக கூறப்படுகின்றது.
பின்பு சமாதானம் அடைந்து, வீட்டிற்கு வந்த பின்பு கள்ளக்காதலரின் தொடர்பை துண்டிக்குமாறு கோரியுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரமடைந்த கல்யாணகுமார் ரஞ்சிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
அப்போது, ரஞ்சிதாவின் கால்களை தாய் பிடித்துக்கொண்டு உதவி செய்துள்ளார். பின்னர் விஷயம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக உடலை எரித்துவிட கல்யாணகுமாரின் நண்பரின் உதவியுடன் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.