தாம்பத்ய உறவுக்கு மறுத்த மனைவி - கணவன் செய்த வெறிச்செயல்!
பாலியல் உறவுக்கு மறுத்த மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
மறுத்த மனைவி
கர்நாடகா, பெடகேரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷேக்கப்பா. இவரது மனைவி நாகம்மா(42). இருவருக்கும் நள்ளிரவில் சண்டை ஏற்பட்டுள்ளது.
அப்போது திடீரென்று ஆத்திரமடைந்த ஷேக்கப்பா மனைவியின் கழுத்தை நெரித்துள்ளார். மேலும், வீட்டில் கிடந்த கோடரியை எடுத்து கண்மூடித்தனமாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மனைவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கணவன் வெறிச்செயல்
தொடர்ந்து ஷேக்கப்பா தனது மனைவியை கொன்றதாக காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதனையடுத்த விசாரணையில், நள்ளிரவில் 2 முறை தனது மனைவியை உடலுறவுக்கு அழைத்தேன். அவர் மறுத்து விட்டார்.
இதுதொடர்பாக 2 பேருக்கும் சண்டை ஏற்பட்டது. மனைவியை கொலை செய்து விடுவதாக மிரட்டினேன். அவர் என்னை கொலை செய்ய முடியாது என்று என்னை கேலி செய்தார்.
இதனால் அவரை கழுத்தை நெரித்தும், கோடரியால் வெட்டியும் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவரை கைது செய்துள்ளனர்.