Wednesday, May 7, 2025

இளம் நடன ஆசிரியை கொடூர கொலை - நாற்காலியில் கட்டிவைத்து கொடூரம்

Attempted Murder Bengaluru Crime
By Sumathi 8 months ago
Report

நடன ஆசிரியை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடன ஆசிரியை கொலை

பெங்களூரு கெங்கேரி உபநகராவைச் சேர்ந்தவர் நவ்யஸ்ரீ(25). இவரது கணவர் கிரண். கார் ஓட்டுநராக உள்ளார். இருவரும் அங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

நவ்யஸ்ரீ

அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடன ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நவ்யஸ்ரீ, அவரின் தோழி ஐஸ்வர்யாவுடன் தனது வீட்டில் தூங்கியுள்ளார். மறுநாள் காலை ஐஸ்வர்யா எழுந்து பார்த்தபோது, பக்கத்து அறையில் நவ்யஸ்ரீ, ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

தாய் செய்த செயல் - மின்கம்பத்தில் கட்டிவைத்து கொடூரமாக தாக்கிய மகன்!

தாய் செய்த செயல் - மின்கம்பத்தில் கட்டிவைத்து கொடூரமாக தாக்கிய மகன்!


தீவிர விசாரணை  

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில், நவ்யஸ்ரீயின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், கணவன் – மனைவி இடையே அடிக்கடி மோதல் வெடித்துள்ளது. இதனால் மனமுடைந்த ஆசிரியர், தனது நண்பர்கள் ஐஸ்வர்யா மற்றும் அனில் ஆகியோரை சந்தித்து, கணவர் கரண் கொடுக்கும் தொல்லையால்,

இளம் நடன ஆசிரியை கொடூர கொலை - நாற்காலியில் கட்டிவைத்து கொடூரம் | Dance Teacher Murdered Husband In Bengaluru

தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நாற்காலியில் கட்டிவைத்து கொடுமைப்படுத்தி, கழுத்து அறுக்கப்பட்டும், கழுத்தை நெரித்தும் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

தற்போது, கணவர் கரண், மாற்று சாவி மூலம் வீட்டை திறந்து தனது மனைவியை கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.