ஆசையாய் சென்ற கணவன்; 3 பேருடன் தகாத உறவில் மனைவி - காத்திருந்த அதிர்ச்சி!
பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மிதந்த மனைவி
சேலத்தை சேர்ந்தவர்கள் முருகேசன்(45) - சுகுணவள்ளி(40) தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்களாகியும் குழந்தை இல்லை. முருகேசன் ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், முருகேசனுக்கு பிறந்தநாள் என்பதால் கேக், ஸ்வீட் என வாங்கிக்கொண்டு மனைவிக்கும் கொடுத்துவிட்டு கடைக்கு கிளம்பியுள்ளார். அப்போது அவரது வீட்டருகில் உள்ள பெண்மணி ஒருவரிடமிருந்து ஃபோன் கால் வந்துள்ளது.
சுகுணவள்ளியை காணவில்லை, வளையல் உடைந்து வீடு முழுவது ரத்தக் கறையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவன் வீடு வந்து பார்த்து தேடியுள்ளார். அப்போது கீழ் மட்ட தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்ததில் மனைவி ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.
தகாத உறவு அம்பலம்
உடனே தகவல் அறிந்து விரைந்த போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து அவரது செல்ஃபோனை ஆய்வு செய்து விசாரித்ததில் 3 ஆண்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து நபர் ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவரது மனைவியும் சுகுணவள்ளியும் நண்பர்கள்.
மனைவியை, சுகுணவள்ளி பிரித்துவிட்டார். தன் மனைவி, தன்னைவிட்டு பிரிந்து செல்ல காரணமே சுகுணவள்ளிதான் என்பதால், ஆத்திரத்தில் அவரை கொன்றதாகத் தெரிவித்துள்ளார்.