வெளிநாட்டு வேலையில் கணவர்; வீட்டில் உல்லாசத்தில் மனைவி - இறுதியில் நேர்ந்த விபரீதம்!
தகாத உறவில் இருந்த இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தகாத உறவு
கோவை, உக்கடம் பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், இளம்பெண்ணுக்கு, அதே பகுதியை சேர்ந்த முகமது பிலால் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. இதனால் இருவரும் நெருங்கி பழகியுள்ளனர்.
கொலை மிரட்டல்
மேலும், தொடர்ந்து இளம்பெண்ணை உல்லாசமாக இருக்காவிட்டால், கணவர் மற்றும் உறவினர்களிடம் கூறிவிடப்போவதாக தொல்லை கொடுத்து, மிரட்டி வந்துள்ளார். இதனால் அவருடன் செல்போனில் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
எனவே, ஆத்திரமடைந்த முகமது பிலால் இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
உடனே பயந்த இளம்பெண் போலீஸில் இதுகுறித்து புகாரளித்துள்ளார். அதன்படி, முகமது பிலால் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.