இயற்கைக்கு மாறான உறவு; மாமியாரும் கணவனுக்கு உடந்தை - கதறும் இளம்பெண்!
உறவுக்கு வற்புறுத்தியதாக பெண் ஒருவர் கணவன் மீது புகாரளித்துள்ளார்.
தகாத உறவு
மகாராஷ்டிரா, தானே மாவட்டம் பிவண்டியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், ''34 வயதான எனது கணவர் நான் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் என்னை இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு உட்படுத்தினார். எனது மாமனார் என்னை தகாத முறையில் தொட்டு துன்புறுத்தினார்.
பெற்றோர் எனக்கு கொடுத்தனுப்பிய நகைகளை தங்களிடம் ஒப்படைக்காத காரணத்தால் மாமியார் உள்பட கணவரின் குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் என்னை அடித்து துன்புறுத்தினர்.
மனைவி புகார்
என்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்திய அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில், போலீசார் கணவர் மற்றும் அவரது பெற்றோர் உள்பட உறவினர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.