அம்மாக்கு பணம் கொடுக்கிறார்.. கணவர் மீது மனைவி புகார் - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

India Maharashtra Mumbai
By Jiyath Feb 15, 2024 11:37 AM GMT
Report

தனது தாய்க்காக பணத்தையும், நேரத்தையும் செலவிடுவதை குடும்ப வன்முறையாக கருத முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விசித்திர வழக்கு 

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 43 வயது பெண் ஒருவர் மும்பையில் உள்ள தலைமை செயலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தனது கணவர் மற்றும் மாமியார் மீது வழக்கு தொடர்ந்தார்.

அம்மாக்கு பணம் கொடுக்கிறார்.. கணவர் மீது மனைவி புகார் - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! | Wife Complains Husband Giving Money To Mother

அதில், தனது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்த சமயத்தில் இந்தியா வரும்போதெல்லம் அவரது தாயுடன் நேரத்தை செலவிடுவதாகவும், ஆண்டுதோறும் ரூ.10,000 பணம் தாய்க்கு கொடுப்பார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அவரது கண் சிகிச்சைக்கும் தனது கணவர் முழு பணத்தை செலவழித்தார்.

தனது மாமியார் மனம் நலம் சரியில்லாதவர்.எனபதை மறைத்து கணவர் தன்னை திருமணம் செய்துவிட்டார். மாமியாரும், கணவரின் உறவினர்களும் தன்னை கொடுமைப்படுத்துகின்றனர். எனவே, தனக்கு பாதுகாப்பு வழங்கி உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

நீங்க ரோடு ராஜாவா..? காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் - எதற்காக?

நீங்க ரோடு ராஜாவா..? காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் - எதற்காக?

நீதிபதி உத்தரவு 

இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மனைவியின் குற்றச்சாட்டுகளை மறுத்த கணவர், "என்னை கணவராக என் மனைவி ஏற்றுக் கொண்டதில்லை.

அம்மாக்கு பணம் கொடுக்கிறார்.. கணவர் மீது மனைவி புகார் - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! | Wife Complains Husband Giving Money To Mother

எனக்கு தெரியாமல் எனது என்.ஆர்.ஐ வங்கி கணக்கில் இருந்து ரூ.21.68 லட்சம் பணம் எடுத்து வீடு வாங்கியுள்ளார். அவரிடமிருந்து விவகாரத்து பெற குடும்ப நல நீதிமன்றத்தை அணுகினேன். அதனால்தான் எனக்கு எதிராக மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார்” என கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஆஷிஷ் அயோசித், "தனது தாய்க்காக பணத்தையும், நேரத்தையும் செலவிடுவதை குடும்ப வன்முறையாக கருத முடியாது.

மனுதாரர் தனக்கு நேர்ந்ததாக கூறப்படும் பாதிப்புகளை நிரூபிக்க தவறவிட்டார். மேலும், மனுதாரர் வேலை பார்த்தும், மாத ஊதியமும் பெற்று வருகிறார். எனவே, அவர் எந்த நிவாரணமும் பெற சட்டப்படி உரிமையில்லை" என வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.