ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை - தண்டனைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!
2 ஆண்டு தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது.
ராகுல் காந்தி
அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில், சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
மேலும், மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து, தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஒரு மனுவும், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும்வரை,
மேல்முறையீடு
குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
அதனைத் தொடர்ந்து, 2 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதனையடுத்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்துள்ளது.