15 வயது சிறுமியுடன் தகாத உறவில் கணவன் - கட்டிப்போட்டு உறுப்பை துண்டித்த மனைவி!
கணவனின் ஆணுறுப்பை மனைவி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
பிரேசில், அதியபாயா நகரைச் சேர்ந்த 39 வயதுடைய கணவனுடன், மனைவியும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கணவன் 15 வயதுடைய உறவுப் பெண்ணுடன் பாலியல் உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை அறிந்து ஆத்திரமடைந்த மனைவி கணவின் கை மற்றும் கால்களை சங்கிலியால் கட்டி வைத்து விட்டு, பின்னர் அவரது ஆணுறுப்பை கத்தியால் வெட்டி எடுத்துள்ளார்.
மனைவி வெறிச்செயல்
அதனை செல்போனில் போட்டோ எடுத்துக் கொண்டு பின் அதனை கழிவறைக்குள் வீசி ஃப்ளஷ் செய்துள்ளார். மேலும், காவல்நிலையத்திற்குச் சென்று தான் செய்த சம்பவத்தை கூறி சரணடைந்துள்ளார். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணையில்,
ஆணுறுப்பை மீண்டும் ஆபரேஷன் மூலம் ஒட்ட வைத்து விட முடியும். இதனை தடுக்கத்தான் கழிவறைக்குள் வீசினேன் என்று மனைவி தெரிவித்துள்ளார். இந்நிலையில், கணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இந்தோனேஷியாவில், பாலியல் உறவுக்கு மறுத்தால் ஆபாச வீடியோக்களை வெளியிடுவேன் என்று மிரட்டிய நண்பனின் அந்தரங்க உறுப்பை இளம்பெண் துண்டித்தது குறிப்பிடத்தக்கது.