ஆடு என நினைத்து ஆணுறுப்பை வெட்டி கொண்ட நபர் - கனவால் அதிர்ச்சி!
கனவில் ஆட்டை வெட்டுவதாக நினைத்து தவறுதலாக தனது ஆணுறுப்பை நபர் ஒருவர் வெட்டிக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆழ்ந்த தூக்கம்
மேற்கு ஆப்ரிக்கா நாடான கானாவில் வசித்து வருபவர் கோஃபி அட்டா(34) என்பரான விவசாயியான இவர் மதிய நேரம் நாற்காலியில் உட்கார்ந்து தூங்கி உள்ளார்.
அப்போது கனவில் தனது மனைவிக்கு சமைப்பதற்காக ஆட்டுக்கறியை வெட்டுவதாக நினைத்து அவரது ஆணுறுப்பை தவறுதலாக வெட்டியிருக்கிறார். அன்று அவரது மனைவி பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
ஆடு என எண்ணி...
அப்போது தனது கணவரின் ஆணுறுப்பில் இருந்து ரத்தம் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
காயமடைந்த அட்டா இதுகுறித்து கூறுகையில், தனக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். மேல் சிகிச்சை செய்ய கோம்ஃபோ அனோக்யே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
கனவால் அதிர்ச்சி
ஆம்புலன்சில் எரிபொருளுக்கு கொடுக்க கூட என்னிடம் பணம் இல்லை, பின்னர் அவர்களே எனக்கு அறுவை சிகிச்சை செய்ய கோம்ஃபோ அனோக்யே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என்று கூறியுள்ளார்.
மேலும் தனக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பது குறித்து பேசிய அவர், நான் நாற்காலியில் அமர்ந்து ஆழந்த தூக்கத்தில் இருந்தேன், அப்போது சமைப்பதற்காக ஆட்டு இறைச்சியை வெட்டுவதாக வந்த கனவில் நான் தவறுதலாக எனது ஆணுறுப்பை வெட்டியிருக்கிறேன்.
எனது கைக்கு எப்படி கத்தி வந்தது, நான் எப்போது கத்தியை என் கைகளில் எடுத்தேன் என்று எதுவும் எனக்கு நினைவில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்ட ஆறு வாரங்களுக்கு பிறகு அவரது நிலை குணமடைந்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.