கறிவிருந்துக்கு மறுப்பு - மாமனாரின் ஆணுறுப்பை அறுக்க முயன்ற மருமகள்!
குடும்பத் தகராறில் தன் மாமனாரின் ஆணுறுப்பை மருமகள் அறுக்க முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
குடும்ப தகராறு
மேற்கு வங்கம், மெடினிபூர் பக்ச்சா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிகா ஹைத். இவர் தன் கணவரிடம் தன் தந்தை வீட்டில் கறிவிருந்து சமைத்திருப்பதாகவும், ஆகையால் அங்கு செல்ல வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
அதற்கு அவரது கணவர் அனுமதி தராததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் கணவரின் குடும்பத்தை மனைவி தவறாக பேசியுள்ளார். இதனைக் கேட்ட அந்தப் பெண்ணின் மாமனார், தன் குடும்பத்தை அவதூறாகப் பேச வேண்டாமென தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மருமகள் வெறிச்செயல்
இதில் ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த பெண், மாமனாரின் ஆணுறுப்பை அறுக்க முயன்றுள்ளார். இதனால் வலியில் துடித்த அவரின் குரல்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அந்தப் பெண்ணை அக்கம்பக்கத்தினர் கயிற்றால் கட்டிவைத்தனர். கயிற்றை அவிழ்த்தவர் தனது தந்தை வீட்டிற்கு ஓடியுள்ளார். இதுகுறித்து ஷிகாவின் மாமியார் காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், ஷிகா கைத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷிகாவிற்கு 14 நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதுகுறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.