சிறுநீர் கழிப்பதில் வேதனை - ஆணுறுப்பை கோடாரியால் வெட்டிய கொடூரம்!

Madhya Pradesh
By Sumathi Sep 05, 2022 08:02 AM GMT
Report

முதியவர் ஒருவர் ஆணுறுப்பை கோடாரியால் வெட்டி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வயிற்று வலி 

மத்தியப் பிரதேசம், தமோஹ் மாவட்டத்தில் உள்ள மெஹ்ரோன் என்ற இடத்தில் வசிப்பவர் நித்தியானந்த் திவாரி (75). இவருக்கு கடந்த சில மாதங்களாக சிறுநீர் கழிக்கும்போது அடிவயிற்றில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

சிறுநீர் கழிப்பதில் வேதனை - ஆணுறுப்பை கோடாரியால் வெட்டிய கொடூரம்! | Old Man Who Cut His Penis With An Axe

அதோடு அவரின் ஆணுறுப்பிலும் கடுமையான வலி இருந்து வந்திருக்கிறது. இதனால் ஒவ்வொரு நாளும் சிறுநீர் கழிப்பது என்பது திவாரிக்கு வேதனையாக இருந்துள்ளது. இதற்காக எடுத்துகொண்ட சிகிச்சைகளும் பலனளிக்கவில்லை.

நடந்தது என்ன?

சம்பவத்தன்றும் வழக்கம் போல் சிறுநீர் கழித்தபோது கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. உடனே வீட்டிற்குள் சென்ற திவாரி அங்கு இருந்த கோடரியை எடுத்து வந்து தன்னுடைய ஆணுறுப்பை வெட்டி எடுத்துவிட்டார்.

இதையடுத்து ரத்தப்போக்கு அதிகமாக வலியால் கத்தியுள்ளார். பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வெட்டிய ஆணுறுப்பை இணைக்க முடியாது என தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.