கள்ளக்காதலியுடன் கணவர்; மகனுடன் உள்ளே நுழைந்த மனைவி - களேபரமான வீடு!
கள்ளக்காதலியுடன் இருந்த கணவரை அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் கையும், களவுமாக பிடித்துள்ளனர்.
கள்ளக்காதல்
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். மேலும், இவர் தனியாக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இதனிடையே இவர் சில பெண்களுடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவரது மனைவி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
இதையடுத்து, தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணுடன் கணவர் நெருக்கமாக பழகி வந்துள்ளார். பின்னர் அந்த பெண்ணுக்கு ஒரு வீடும் எடுத்துக்கொடுத்து தங்க வைத்துள்ளார்.
பெரும் தகராறு
மேலும், அடிக்கடி அந்த வீட்டுக்கு சென்று கள்ளக்காதலியுடன் உல்லாசமான இருந்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த அவரது மனைவி, தனது மகனுடன் அந்த வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் தனது கணவரின் கள்ளக்காதலியை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் தனது மனைவியையும், மகனையும் அடித்துள்ளார். இதனையடுத்து மகனும் மனைவியும் சேர்ந்து கணவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
பின்னர் கணவர் உள்ளிட்டோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.