55 வயதில் மோகம்; மகளை 2வது திருமணம் செய்து தராத ஆத்திரம் - உயிரோடு எரித்த கொடூரம்!

Attempted Murder Crime Ramanathapuram Death
By Sumathi Apr 12, 2024 05:33 AM GMT
Report

திருமணம் செய்து தர மறுத்த தாய் மற்றும் அவரின் பேரன் - பேத்தி மீது டீசல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2வது திருமணம்

ராமநாதபுரம், பொதுவக்குடியைச் சேர்ந்தவர் குருவம்மாள்(50). இவரின் மகள் வனிதா.

paramakudi vanitha

இவர் 2021 சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்ற மகிழ்ச்சியில் தனது நாக்கை அறுத்து பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியவர். இவரது கணவர் கார்த்திக். வர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

வனிதா கனவரை பிரிந்து குழந்தைகள் மற்றும் தாயார் குருவம்மாளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், குருவம்மாவுடன் வேலை செய்து வரும் ஆறுமுகசாமி (57) என்பவர், தனது மனைவி இறந்துவிட்ட நிலையில் வனிதாவை தனக்கு இரண்டாவது திருமணம் செய்து தருமாறு தொல்லை செய்துள்ளார்.

One side love... உயிரோடு மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞன்!

One side love... உயிரோடு மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞன்!


கொடூரக் கொலை

ஆனால் இதனை மறுத்த குருவம்மாள், பாம்பூரை சேர்ந்த லேசர் நெல்சன் பீட்டர் என்பவருக்கு தனது மகள் வனிதாவை திருமணம் செய்து கொடுத்துள்ளார். தொடர்ந்து, நெல்சனும் வனிதாவும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டனர்.

55 வயதில் மோகம்; மகளை 2வது திருமணம் செய்து தராத ஆத்திரம் - உயிரோடு எரித்த கொடூரம்! | Man Killed Mother Of Women Asked For 2Nd Marriage

இந்நிலையில், வனிதாவை தனக்கு திருமணம் செய்து கொடுக்காத ஆத்திரத்தில் இருந்து வந்த ஆறுமுகம், குருவம்மாள் வீட்டுக்கு சென்று டீசலை ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்த தப்பி சென்றுவிட்டார். இதில் அலறல் சத்தம் கேட்டு உடனே வந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், குருவம்மாளும், பேத்தியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பேரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், விசாரணைக்கு பயந்து ஆறுமுகம் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.