One side love... உயிரோடு மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞன்!
காதலை ஏற்க மறுத்த மாணவியை இளைஞன் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருதலை காதல்
ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் படித்து வரும் 12ம் வகுப்பு படித்து வந்தவர் அங்கிதா குமாரி. இவரை அதே பகுதியைச் சேர்ந்த ஷாருக் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார்.
அவரது காதலை ஏற்க அந்த மாணவி மறுத்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த அவர் பெட்ரோலை எடுத்து மாணவி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால், 90 சதவீத தீ காயங்களுடன் மீட்கப்பட்ட மாணவி புலோ ஜனோ மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உயிரோடு எரிப்பு
இதனையடுத்து, மேல்சிகிச்சைக்காக ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, மாணவி உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் இளைஞர் ஷாருக்கை கைது செய்துள்ளனர்.
மாணவி உயிரிழந்த செய்தியை அறிந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.