பக்கத்து வீட்டு பெண்ணுடன் முதியவர் உல்லாசம் - உயிருடன் பெட்ரோல் ஊற்றி எறித்த உறவினர்கள்!

Attempted Murder Sexual harassment Telangana
By Sumathi Jun 09, 2022 05:37 PM GMT
Report

பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் 62 வயது முதியவர் உல்லாசம் அனுபவித்து வந்த போது அப்பெண்ணின் உறவினர்கள் பெட்ரோலை பிடித்து ஊற்றி தீவைத்து உயிருடன் எரித்து கொலை செய்துள்ளனர்.

நடந்தது என்ன?

தெலுங்கானா மாநிலம் காம ரெட்டி மாவட்டம் பிபிபேட்டா மண்டலத்தை சேர்ந்தவர் இரோல்லா மல்லையா (62) இவரது மனைவி நர்சவ்வம்மா இருவரும் விவசாயம் செய்து பிழைத்து வந்தனர்.

பக்கத்து வீட்டு பெண்ணுடன் முதியவர் உல்லாசம் - உயிருடன் பெட்ரோல் ஊற்றி எறித்த உறவினர்கள்! | Gasoline Burning While In A Relationship

இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் நடந்து முடிந்துவிட்டது. வயதான தம்பதியர் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் மல்லையா பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்தார்.

 உயிருடன் தீ வைப்பு

அடிக்கடி அந்தப் பெண்ணுடன் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிந்தது. பலமுறை மல்லையாவை எச்சரித்து வந்தனர்.

பக்கத்து வீட்டு பெண்ணுடன் முதியவர் உல்லாசம் - உயிருடன் பெட்ரோல் ஊற்றி எறித்த உறவினர்கள்! | Gasoline Burning While In A Relationship

ஆனால் அவர் கேட்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில் பக்கத்து வீட்டுப் பெண்ணை மீண்டும் தனது வீட்டுக்கு அழைத்து வந்து மல்லய்யா உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

நள்ளிரவில் நடந்த இச்சம்பவத்தை பார்த்த உறவினர்கள் மல்லையாவை கடுமையாக தாக்கினர், பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்து மல்லையா மீது ஊற்றி தீ வைத்து எரித்தனர்.

அதில் பலத்த காயமடைந்த மல்லையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு கிராம மக்கள் கூடினர், இதுகுறித்து உடனே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மல்லையாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அப்பெண்ணின் உறவினர்களை தேடினர்.

அதில் கொங்காரி போச்சையா, ராஜ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இறந்த மல்லையா மாந்திரீகம் செய்து தங்கள் வீட்டு பெண்ணை மயக்கி உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறினர்.

இதைனையடுத்து போலீசார், இதில் இன்னும் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகிறார். மேலும் கைது செய்யப்பட்டவர்களை சிறையில் அடைத்தனர்.

 இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.