மறுபிறவி எடுக்க தீக்குளித்த கல்லூரி மாணவர் : அருந்ததிஅனுஷ்கா போல் பாவித்தவருக்கு நேர்ந்த சோகம்
அனுஷ்காவின் அருந்ததி திரைப்படத்தை பார்த்து பெங்களூருவை சேர்ந்த மாணவன் ஒருவன் தீக்குளித்துள்ளார்.
சினிமா ஆர்வம்
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தை சேர்ந்தவர் ரேணுகா பிரசாத். இவர் 2-ம் ஆண்டு பி.யு.சி. படித்து வந்துள்ளார். திரைப்படம் பார்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர் அந்த படத்தில் வரும் கதாபாத்திரங்களாக தன்னை பாவித்துகொள்வது வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை அனுஷ்காவின் "அருந்ததி" படத்தை பார்த்துள்ளார். அந்த திரைப்படத்தில் அனுஷ்கா தன் தலையில் தேங்காய்களால் அடித்து உயிரை மாய்த்துக்கொண்டு மறுபிறவி எடுக்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றிருக்கும்.
மறுபிறவி ஆசையில் தீ குளிப்பு
இந்த காட்சியினை பார்த்த பிரசாத் அனுஷ்காவை போல உயிரிழந்து மறுபிறவி எடுக்கலாம் என்று நினைத்து , தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார்.
உயிருக்காக போராடியா நிலையில் இருந்த ரேணுகா பிரசாத்தினை அப்பகுதி மக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிரசாத்தின் நிலையை கண்டு அவரின் தந்தை கண்ணீர்விட்டு அழுதார்.
மேலும் அவர், "நான் உன்னை அருந்ததி படம் பார்க்க வேண்டாம் என்று கூறினேன் என கண்ணீர் விட்டார். இந்த சம்பவத்தை குறித்து தற்போது அம்மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.