ஒரே பெண்ணை காதலித்த நண்பர்கள்; WhatsApp ஸ்டேட்டஸால் தகராறு - இறுதியில் சோகம்!

Tamil nadu Death Erode Murder
By Jiyath Jun 17, 2024 06:32 AM GMT
Report

காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவரை அவரது நண்பரே குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காதல் விவகாரம் 

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேது மணிகண்டன் (23). இவர் நாற்காலி தயாரிக்கும் நிறுவனத்தில் வெல்டராக பணிபுரிந்து வருகிறார்.

[4O8ZEI

அதேபோல் பவானியில் உள்ள செங்காடு பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன். இவர் தள்ளுவண்டியில் காளான் கடை நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். இதனிடையே சேது மணிகண்டன், ஒரு பெண்ணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளார்.

ஆனால் அந்த பெண் அவரிடம் இருந்து விலகி குருநாதனை காதலிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண்ணுக்கு பிறந்தநாள் வந்துள்ளது. இதனால் சேது மணிகண்டன் அந்த பெண்ணின் புகைப்படத்தை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்து வாழ்த்து சொன்னதாக கூறப்படுகிறது.

கள்ளக்காதலியுடன் கணவர்; மகனுடன் உள்ளே நுழைந்த மனைவி - களேபரமான வீடு!

கள்ளக்காதலியுடன் கணவர்; மகனுடன் உள்ளே நுழைந்த மனைவி - களேபரமான வீடு!

நண்பன் கொலை 

அதேபோல் குருநாதனும் அந்த பெண்ணின் புகைப்படத்தை வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இரவில் பவானி அரசு மருத்துவமனை அருகே சேது நின்று கொண்டிருந்தார்.

ஒரே பெண்ணை காதலித்த நண்பர்கள்; WhatsApp ஸ்டேட்டஸால் தகராறு - இறுதியில் சோகம்! | Man Killed His Friend For Fell In Love Same Girl

அப்போது அங்கு வந்த குகநாதன், அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த குகநாதன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சேது மணிகண்டனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்து போன அவர் ரத்த வெள்ளத்தில் அலறியபடி கீழே விழுந்தார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சேதுவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து குகநாதனை கைது செய்தனர்.