காற்று வாங்க கதவை திறந்து வைத்த டீச்சர் - கத்தி முனையில் நபர் செய்த கொடூர காரியம்!
வீட்டில் தனியாக இருந்த பெண் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம நபர்
சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவன் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவரது கணவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கணவர் இரவில் ஆட்டோ ஓட்ட சென்றதால், அந்த பெண் குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
மேலும், அவர் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியதாக கூறப்படுகிறது. அப்போது போதை ஆசாமி ஒருவர் அந்த வீட்டிற்குள் நுழைந்து, பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
அப்போது அவர் கத்தி கூச்சலிட முயன்றதால், குழந்தைகளை கொன்று விடுவேன் என்று அந்த நபர் மிரட்டியுள்ளார். பின்னர் அந்த பெண்ணை கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து அந்த நபர் தப்பியோட முயன்றதும் அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனை கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அந்த நபரை மடக்கிப் பிடித்து சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ஜான் பால்ராஜ் (38) என்பவரை கைது செய்தனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.