கல்லூரி மாணவனுடன் உறவில் ஆசிரியை - கதவை பூட்டி கையும் களவுமாக பிடித்த கணவன்

Andhra Pradesh Viral Photos Relationship Crime
By Sumathi May 15, 2025 06:03 AM GMT
Report

ஆசிரியை ஒருவர் மாணவனுடன் முறையற்ற தொடர்பில் இருந்த போது கணவனிடம் சிக்கியுள்ளார்.

மாணவனுடன் உறவு

ஆந்திரா, ராமாராவ் பேட்டையை சேர்ந்தவர் லட்சுமணன். இறால் பண்ணை வைத்துள்ளார். இவரது மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார்.

andhra

தினமும் இரவுவேளையில் தான் நடத்தி வரும் இறால் பண்ணை காவலுக்காக லட்சுமணன் சென்று வந்துள்ளார். நாகலட்சுமி திருமணத்திற்கு முன்பு தனியார் பள்ளி ஒன்றில் கணினி துறையில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அங்கு பயின்ற மணிகண்டா என்ற மாணவனுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

21 பேரின் உயிர்களை காவு வாங்கிய கள்ளச்சாராயம் - முதல்வர் பதவி விலக கோரிக்கை

21 பேரின் உயிர்களை காவு வாங்கிய கள்ளச்சாராயம் - முதல்வர் பதவி விலக கோரிக்கை

அதிர்ச்சியின் கணவன்

இதனால் இருவரும் அடிக்கடி தனியாக வெளியில் சந்தித்து வந்துளனர். இதற்கிடையில் மனைவியின் நடவடிக்கைகளால் லட்சுமணன் சந்தேகமடைந்துள்ளார். இந்நிலையில், வழக்கம்போல் லட்சுமணன் இறால் பண்ணைக்கு காவலுக்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் மணிகண்டா வீட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

கல்லூரி மாணவனுடன் உறவில் ஆசிரியை - கதவை பூட்டி கையும் களவுமாக பிடித்த கணவன் | Wife Affair With Student Husband Caught Andhra

திடீரென நள்ளிரவில் லட்சுமணன் மீண்டும் வீட்டிற்கு வந்த போது மாணவனுடன் பேராசிரியை முறையற்ற தொடர்பில் இருந்தது தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே, வீட்டின் கதவை வெளிப்பக்கமாக பூட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின் போலீஸார் விரைந்து வந்து மணிகண்டாவை வெளியே கொண்டு வந்துள்ளனர். அப்போது ஆத்திரத்தில் லட்சுமணன் மாணவனை தாக்க முயன்றார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது மாணவனை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.