இந்திய ரயில் பயணத்தால் நுரையீரல் தொற்று; மோசம் - அமெரிக்க சுற்றுலா பயணி வீடியோ
இந்திய ரயில் பயணத்தால் நுரையீரல் தொற்று ஏற்பட்டதாக அமெரிக்க யூடியூபர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
இந்திய ரயில் பயணம்
அமெரிக்காவை சேர்ந்தவர் நிக் மேடாக். இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு, தனது அனுபவங்களை இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருந்த நிக், வாரணாசியில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் நியூ ஜல்பைகுரி வரை செல்லும் ரயிலில் 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் பயணம் செய்துள்ளார். தொடர்ந்து அந்த பயணம் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சுற்றுலா பயணி வீடியோ
அதில், பயணம் செய்த ரயிலில் கழிவறை மோசமான நிலையில் இருந்தது. இந்தியாவில் ரயில் பயணம் மேற்கொண்டு 3 நாட்களுக்கு பிறகு தனக்கு மூச்சுக்குழாய் தொற்று ஏற்பட்டது. தற்போது பூட்டானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். நான் இந்தியாவை நேசிக்கிறேன்.
அன்பான மக்களும், எல்லையில்லா அழகு வாய்ந்த நிலப்பரப்புகளும், வளமான மற்றும் புனிதமான வரலாறும் இந்தியாவிடம் உள்ளன. வாரணாசியில் இருந்து நியூ ஜல்பைகுரிக்கு எனது 15 மணி நேர ரயில் பயணம் (3-ம் வகுப்பு ஏ.சி.யில்) எனது 6 வருட பயணத்தில் நான் பார்த்த மிக மோசமான விஷயங்களில் ஒன்றாகும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
எனது உடல்நலம் தற்போது சீராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அவரது பதிவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் இணையவாசிகள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

CWC 6: Identity Food சுற்றில் வெற்றியாளராக மாறிய 3 போட்டியாளர்கள்- முதல் நாளே அடித்த ஜாக்போட் Manithan
