ரயில் பெட்டிகளில் இருக்கும் வெள்ளை, மஞ்சள் நிற கோடுகள் - என்ன அர்த்தம் தெரியுமா..?
ரயில் பெட்டிகள் மீது மஞ்சள், வெள்ளை, பச்சை நிறத்தில் கோடுகள் இருப்பதற்கான காரணம் பற்றி பார்ப்போம்.
இந்திய ரயில்வே
உலகின் நான்காவது பெரிய ரயில்வே நெட்வொர்க்காக இந்திய ரயில்வே உள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் போக்குவரத்து சேவையாகவும் ரயில் தான்.
இந்திய ரயில்வே துறையில் ரயில் பெட்டிகள் மீது மஞ்சள், வெள்ளை, பச்சை நிறத்தில் கோடுகள் இருப்பதற்கு தனிப்பட்ட காரணம் உள்ளது. இந்தியாவில் இயக்கப்படும் விரைவு ரயில்கள், அதிவிரைவு ரயில்கள் நீல நிறங்களில் இருக்கும்.
என்ன காரணம்?
இந்த நீல நிற ரயில் பெட்டிகளின் ஜன்னல் மீது வெள்ளைக் கோடு இருந்தால் முன்பதிவு இல்லாத (unreserved coach) பெட்டிகள் என்று அர்த்தம். அதேபோல் மஞ்சள் நிற கோடுகள் இருந்தால் மாற்றுத்திறனாளி மற்றும் உடல்நலம் முடியாதவர்களுக்கான சிறப்பு பெட்டி என்று அர்த்தம்.
மேலும், பச்சை மற்றும் சாம்பல் நிறத்தில் கோடுகள் இருந்தால் அது மகளிருக்கான சிறப்பு பெட்டிகளாகும். இதுபோன்ற அடையாளங்களை ரயிலில் பயணிக்கும் பயணிகள் வசதிக்காக ரயில் பெட்டிகள் இந்திய ரயில்வே பயன்படுத்துகின்றன.