ரயிலில் ஜெனரல் கோச்சுகள் முதல், கடைசியில் இருப்பது ஏன்..? பலரும் அறியாத தகவல்!

India Indian Railways Railways
By Jiyath Jun 01, 2024 10:23 AM GMT
Report

ரயிலில் ஜெனரல் கோச்சுகள் ஏன் முதல் மற்றும் கடைசியில் உள்ளது என்பது குறித்த தகவல். 

ஜெனரல் கோச்

உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக இந்தியன் ரயில்வே நெட்வொர்க் (Indian railway) உள்ளது. இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். ரயிலில் ஜெனரல் கோச் (General Coaches), ஸ்லீப்பர், 3rd AC, 2nd AC, 1st AC போன்ற பெட்டிகள் உள்ளது.

ரயிலில் ஜெனரல் கோச்சுகள் முதல், கடைசியில் இருப்பது ஏன்..? பலரும் அறியாத தகவல்! | Why General Coaches Are First And Last In Train

இதில் ஜெனரல் கோச்சுகள் ரயிலின் முன் மற்றும் பின் பக்கத்தில் இருக்கும். ஒவ்வொரு ரயிலின் அமைப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் இருக்கும். அதாவது, எஞ்சினைத் தொடர்ந்து AC-3, AC-2, ஸ்லீப்பர் கோச்சுகள் மற்றும் ரயிலின் பின்பக்கத்தை நோக்கி அதாவது இறுதியாக பொதுப் பெட்டி (ஜெனரல்) என பொருத்தப்பட்டிருக்கும்.

மண்டை ஓட்டில் இருந்த தடயம்; 4000 ஆண்டுகள் முன்னரே புற்றுநோய் சிகிச்சை - அதிர்ந்த ஆய்வாளர்கள்!

மண்டை ஓட்டில் இருந்த தடயம்; 4000 ஆண்டுகள் முன்னரே புற்றுநோய் சிகிச்சை - அதிர்ந்த ஆய்வாளர்கள்!

என்ன காரணம்?

இந்தியன் ரயில்வே தகவலின்படி, பொதுப் பெட்டிகளில் (ஜெனரல் கோச்) கூட்டம் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு நிலையத்திலும் அதிகமான பயணிகள் பொதுப் பெட்டிகளில் ஏறி, இறங்குவார்கள். இதனால் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

ரயிலில் ஜெனரல் கோச்சுகள் முதல், கடைசியில் இருப்பது ஏன்..? பலரும் அறியாத தகவல்! | Why General Coaches Are First And Last In Train

ரயிலின் நடுப்பகுதியில் ஜெனரல் கோச்சுகளை சேர்த்தால் ரயிலின் நடுப்பகுதியில் அதிக எடை ஏற்பட்டு ரயில் சமநிலையில் இருக்காது. போர்டிங்-டிபோர்டிங்கிலும் சிக்கல் ஏற்படும். ஜெனரல் கம்பார்ட்மென்ட் நடுவில் இருந்தால், அது இருக்கை அமைப்போடு மற்ற ஏற்பாடுகளையும் பாதிக்கும்.

எனவே பொதுப் பெட்டிகளை ரயிலின் முன் மற்றும் பின்புறம் வைப்பதன் மூலம் பயணிகள் கூட்டம் சமமாக பிரிக்கப்படுகிறது. திரும்பும் பயணத்தில் இருபுறமும் என்ஜினை சேர்ப்பது ரயிலின் சமநிலையை பராமரிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.