மண்டை ஓட்டில் இருந்த தடயம்; 4000 ஆண்டுகள் முன்னரே புற்றுநோய் சிகிச்சை - அதிர்ந்த ஆய்வாளர்கள்!
பண்டைய காலங்களிலேயே மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மண்டை ஓடு
ஜெர்மனியில் உள்ள டூபிங்கன் பல்கலைக்கழகம், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ், ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா மற்றும் சாண்டியாகோ டி கம்போஸ்டெலா ஆகியவற்றின் விஞ்ஞானிகள் 4,000 ஆண்டுகள் பழமையான எகிப்தியர்களின் மண்டை ஓடுகளில் டிஎன்ஏ-ல் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே நோயாளியின் மூளையில் கட்டிகள் அகற்றப்பட்டதற்கான தடையங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
புற்றுநோய்
இதுகுறித்து ஆராய்ச்சிக் குழுவின் தலைவரும் விஞ்ஞானியுமான டாடியானா டோண்டினி கூறுகையில், இந்த பழமையான மண்டை ஓடுகளில் 4000 ஆண்டுகளுக்கு முன்னரே புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம்.
அதில் கத்தியால் வெட்டப்பட்டதை நுண்ணோக்கியில் பார்த்தபோது முதலில் எங்களால் நம்ப முடியவில்லை. இதன் மூலம், புற்றுநோய் செல்களுக்கான அறுவை சிகிச்சை பற்றி பண்டைய எகிப்தியர்களுக்கு தெரிந்துள்ளது என்பது தெளிவாகிறது" என்று தெரிவித்துள்ளார்.