பிரமிடுகள் கட்டப்பட்டது எப்படி? அருகில் இருந்த கிளை நதி - விலகியது 4000 ஆண்டு மர்மம்!

Egypt World
By Jiyath May 19, 2024 09:46 AM GMT
Report

எகிப்து பிரமிடுகள் எவ்வாறு கட்டப்பட்டிருக்கும்? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 

எகிப்து பிரமிடுகள் 

உலக அதிசயங்களில் ஒன்றாக எகிப்தில் கட்டப்பட்டுள்ள பிரமிடுகள் பார்க்கப்படுகிறது. இது சுமார் 3700 முதல் 4700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். ஆனால், புகழ்பெற்ற கிசா பிரமிடு உட்பட 31 பிரமிடுகள் எப்படி கட்டப்பட்டது, அந்த பாறைகள் எப்படி கொண்டு வரப்பட்டிருக்கும்? என்ற கேள்விக்கு விடை தெரியாமலே உள்ளது.

[NOUKIQ ]

இந்நிலையில் இதன் புதிர்களை கண்டறிய அமெரிக்காவில் உள்ள வட கரோலினா வில்மிங்டன் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, நைல் நதியின் 64 கி.மீ கொண்ட கிளை நதி ஒன்று எகிப்தில் இருந்ததாகவும், இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாலைவனத்தாலும், விவசாய நிலங்களாலும் மறைந்திருந்தது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இத்துனூண்டு தான்.. ஆனால் சத்தம் யானையை விட அதிகம் - அதிசய மீன் பற்றி தெரியுமா?

இத்துனூண்டு தான்.. ஆனால் சத்தம் யானையை விட அதிகம் - அதிசய மீன் பற்றி தெரியுமா?

வரைபடம் 

இந்த நதியானது பிரமிடுகளுக்கு அருகில் இருந்ததாகவும், பிரமிடுகள் கட்ட மிகப்பெரிய பாறைகளை கொண்டுவர இந்த நதிகளை பயன்படுத்தியிருப்பார்கள் என்றும் கணிக்கின்றனர். இதுகுறித்து பேராசிரியர் எமன் கோனிம் கூறுகையில் "இதனை கண்டறிய ரேடார் செயற்கைக்கோள் படங்கள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

பிரமிடுகள் கட்டப்பட்டது எப்படி? அருகில் இருந்த கிளை நதி - விலகியது 4000 ஆண்டு மர்மம்! | How Egyptians Built Pyramids Researches

பிரமிடுகளின் வரிசைகள் கொண்டும் நதியின் பாதை குறித்து ஆராய்ந்து வருகிறோம். ரேடார் செயற்கைக்கோள் படங்கள் தொழில்நுட்பம் மூலம் மணலுக்கு அடியில் இருக்கும் நிலப்பதிகுதை கண்டறிந்து அதன் புகைப்படங்களை எடுத்து வருகிறோம்.

இந்த நதியின் பாதை மற்றும் அளவை இன்னும் சரியாக கண்டறியவில்லை. அந்த தொழில்நுட்பத்தை வைத்து அப்போது இருந்த வரைபடத்தை கண்டறியப்போகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.