6,000 ஆண்டுகளுக்கு முன்பே மனித உயிர்ப்பலி; பெண்கள் கொடூர கொலை - அதிர்ச்சி தகவல்!

France Death World
By Jiyath Apr 13, 2024 02:30 PM GMT
Report

6,000 ஆண்டுகளுக்கு முன்பே மனித உயிர்ப்பலி நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மனித உயிர்ப்பலி

பிரான்ஸ் நாட்டின் செயின்ட் பால் டிராயிஸ் சேடக்ஸ் என்ற இடத்தில் உள்ள கல்லறையை 20 ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வில் கற்காலத்தில் 6,000 ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பாவில் மனித உயிர்ப்பலி நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

6,000 ஆண்டுகளுக்கு முன்பே மனித உயிர்ப்பலி; பெண்கள் கொடூர கொலை - அதிர்ச்சி தகவல்! | Human Sacrifice In Europe 6 Thousand Years Ago

இந்த உயிர்ப்பலி சம்பவம் ஐரோப்பிய பகுதியில் பொதுவான நடைமுறையாக இருந்துள்ளது என்பதும் பெண்கள் உயிருடன் மண்ணுக்குள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு சடங்காகவே அவர்கள் செய்துள்ளனர்.

தினசரி ரயில் டிக்கெட் எடுக்கும் கிராம மக்கள்; ஆனால் பயணிப்பதே இல்லை - என்ன காரணம்?

தினசரி ரயில் டிக்கெட் எடுக்கும் கிராம மக்கள்; ஆனால் பயணிப்பதே இல்லை - என்ன காரணம்?

இன்கேப்ரெட்டாமென்டோ

இதனை ரோனி பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கல்லறை ஒன்றில், பெண்களின் எலும்புக்கூடுகளை ஆய்வு செய்ததில் இருந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதில் 2 பெண் எலும்புக்கூடுகளானது மூதுக்குப்பகுதி வழியே அவர்களின் கால்கள், கழுத்து பகுதியுடன் சேர்த்து கட்டப்பட்டு கொடூர முறையில் இருந்துள்ளன.

6,000 ஆண்டுகளுக்கு முன்பே மனித உயிர்ப்பலி; பெண்கள் கொடூர கொலை - அதிர்ச்சி தகவல்! | Human Sacrifice In Europe 6 Thousand Years Ago

அவர்களாகவே கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழக்கச் செய்யப்பட்டுள்ளனர். இன்கேப்ரெட்டாமென்டோ என அழைக்கப்படும் இந்த சடங்கின்படி, கிறிஸ்து பிறப்பதற்கு முன் 4,000 முதல் 3,500 வரையிலான ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், பெண்களுக்கு கொடூரங்கள் இழைக்கப்பட்டுள்ளன. இதேபோல மனித உயிர்ப்பலிகள் தொடர்புடைய படுகொலைகள் 20 முறை நடந்துள்ள விவரங்களுக்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.