அழகான குட்டி தீவு.. 42 மணி நேரம் வேலை, ரூ.1.5 கோடி சம்பளம் - எங்கு தெரியுமா?

Scotland World
By Jiyath May 29, 2024 04:30 PM GMT
Report

இரண்டு தீவுகளில் பணிபுரியும் மருத்துவருக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மருத்துவர் 

ஸ்காட்லாந்து நாட்டின் மேற்கு கடற்கரையில் உயிஸ்ட் மற்றும் பென்பெகுலா என்ற 2 தீவுகள் உள்ளன. இந்த தீவுகளில் தற்போது வெறும் 40 மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். இந்நிலையில் வெஸ்டர்ன் ஐல்ஸ் நடத்திய ஆட்சேர்ப்பில் அங்கு மருத்துவருக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழகான குட்டி தீவு.. 42 மணி நேரம் வேலை, ரூ.1.5 கோடி சம்பளம் - எங்கு தெரியுமா? | 40 Hrs Work 1 5 Crore Salary Uist And Benbecula

மேலும், இடமாற்ற உதவித்தொகை ரூ.8 லட்சமும், பணிக்கொடை ரூ.1.3 லட்சம், அலெவன்ஸ் ரூ.11 லட்சம் வழங்கப்படும். அதன்படி ஒரு மருத்துவருக்கு ஆண்டுக்கு மொத்தமாக ரூ.1.5 கோடி ஊதியமாக வழங்கப்படும்.

தலையே இல்லை.. 18 மாதங்கள் உயிர்வாழ்ந்த அதிசய கோழி - இறுதியில் நேர்ந்த சோகம்!

தலையே இல்லை.. 18 மாதங்கள் உயிர்வாழ்ந்த அதிசய கோழி - இறுதியில் நேர்ந்த சோகம்!

ஆசிரியர் 

இதற்காக வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை செய்தால் போதும். இங்கு பணிபுரிய வெளியாட்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். மேலும், அவர்கள் கிராமப்புற மருத்துவத்தில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும் மற்றும் கடலோர பகுதிகளில் பணிபுரிந்த அனுபவமும் இருக்க வேண்டும்.

அழகான குட்டி தீவு.. 42 மணி நேரம் வேலை, ரூ.1.5 கோடி சம்பளம் - எங்கு தெரியுமா? | 40 Hrs Work 1 5 Crore Salary Uist And Benbecula

அதேபோல் இந்த தீவில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் மொத்தம் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட 5 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். அதிலும் வெறும் 4 வயதுடைய 2 மாணவர்கள் நர்சரி வகுப்பில் உள்ளனர். இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 62 லட்சம் ஊதியம் மற்றும் சுமார் ரூ.6 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.