தலையே இல்லை.. 18 மாதங்கள் உயிர்வாழ்ந்த அதிசய கோழி - இறுதியில் நேர்ந்த சோகம்!
தலையே இல்லாமல் 18 மாதங்கள் உயிர்வாழ்ந்த மைக் என்ற கோழியை பற்றிய தகவல்.
அதிசய கோழி
அமெரிக்காவில் உள்ள கொலராடோவில் 1945 காலகட்டத்தில் ஓல்சென் குடும்பம் வசித்து வந்தது. இவர்கள் ஒருநாள் மாலையில் கோழிக்கறி சாப்பிட திட்டமிட்டனர். அதற்காக லாயிட் ஓல்சன் தனது வீட்டில் வளர்க்கும் 'மைக்' என்று பெயரிடப்பட்ட கோழியை சமைக்க கொண்டு சென்றார்.
பின்னர் அந்த கோழியின் தலையை வெட்டியுள்ளார். ஆனால் அந்த கோழி சாகாமல் உயிருடன் இருந்துள்ளது. இது லாயிட் ஓல்சனை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. அவர் அந்த கோழியின் தலையை கோடாரியால் வெட்டியுள்ளார்.
அப்போது கோழியின் தலையின் பெரும்பாலான பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், கழுத்து மற்றும் தொண்டை தொடர்பான நரம்பு துண்டிக்கப்படவில்லை. மேலும், ஒரு காது மற்றும் மூளையின் பெரும்பாலான பகுதி சேதமடையவில்லை.
சோளத் துண்டு
இதன் காரணமாக அந்த அதிசய கோழி தப்பித்து உயிருடன் இருந்துள்ளது. இந்த அதிசய நிகழ்வு அவரை மட்டும் இல்லாமல் அந்த சமயத்தில் உலகையே உற்றுப் பார்க்க வைத்தது. இதனையடுத்து மாய் என்ற அந்த கோழி ஓல்சன் குடும்பத்தில் முக்கிய உறுப்பினராக மாறியது.
மேலும், அந்த கோழிக்கு முழு பராமரிப்பையும் மேற்கொண்டு, தினசரி பாலும் தண்ணீரும் கலந்த உணவை கொடுத்து சொட்டு மருந்தும் அளித்து வந்தார் ஓல்சன். இதனை தொடர்ந்து தலை துண்டிக்கப்பட்ட அந்த கோழி 25 சென்ட் செலவில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு பெரும் புகழ் பெற்றது.
அதன் பிறகு 1999-ம் ஆண்டு முதல் மே மாதத்தின் மூன்றாவது வார இறுதியில் "மைக் தி ஹெட்லெஸ் சிக்கன் டே" என்ற தினம் அந்த பகுதியில் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து கிட்டத்தட்ட 18 மாதங்கள் உயிர்வாழ்ந்த மைக் என்ற கோழி தொண்டையில் சோளத் துண்டு சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது.