ரூ.199 சிக்கன் சாண்ட்விச்சால் சர்ச்சை - இளம்பெண்ணுக்கு இழப்பீடு ரூ.50 லட்சம்?

Gujarat India
By Jiyath May 09, 2024 06:26 AM GMT
Report

பன்னீர் சாண்ட்விச்க்கு பதிலாக சிக்கன் சாண்ட்விச் அனுப்பப்பட்டதால் இளம்பெண் ஒருவர் ரூ.50 லட்சம் இழப்பீடு கோரியுள்ளார்.   

சிக்கன் சாண்ட்விச்

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சாமுண்டாநகர் பகுதியைச் சேர்ந்தவர் நீராலி. இந்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை ஆன்லைன் செயலி மூலம் பன்னீர் டிக்கா சாண்ட்விச்சை ரூ.199-க்கு ஆர்டர் செய்துள்ளார்.

ரூ.199 சிக்கன் சாண்ட்விச்சால் சர்ச்சை - இளம்பெண்ணுக்கு இழப்பீடு ரூ.50 லட்சம்? | Chicken Sandwich Instead Of Paneer Sandwich

ஆனால், அதற்கு பதிலாக சிக்கன் சாண்ட்விச் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை அறியாமல் சிறிது சாப்பிட்ட பிறகுதான், அது சிக்கன் சாண்ட்விச் என்று அந்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. 

நிலவின் தென்தருவத்தில் பேரதிசயம் - ISRO-வுக்கு காத்திருந்த ஆச்சரியம் - என்ன தெரியமா?

நிலவின் தென்தருவத்தில் பேரதிசயம் - ISRO-வுக்கு காத்திருந்த ஆச்சரியம் - என்ன தெரியமா?

இழப்பீடு 

இதனால் ஆத்திரமடைந்த அவர், இதுகுறித்து அகமதாபாத் மாநகராட்சியின் சுகாதாரத்துறையில் புகார் அளித்துள்ளார். மேலும், தனக்கு இழப்பீடாக அந்நிறுவனம் 50 லட்சம் வழங்கவேண்டும் என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளார். 

ரூ.199 சிக்கன் சாண்ட்விச்சால் சர்ச்சை - இளம்பெண்ணுக்கு இழப்பீடு ரூ.50 லட்சம்? | Chicken Sandwich Instead Of Paneer Sandwich

இதுகுறித்து விசாரணை நடத்திய சுகாதாரத்துறை, இந்த தவறுக்காக VRYLY வென்ச்சர்ஸ் உணவு நிறுவனம் நீராலிக்கு ரூ.5000 அபராதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இதே தவறை மீண்டும் செய்தால், உங்கள் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்படும்" என்று எச்சரித்துள்ளது.