நிலவின் தென்தருவத்தில் பேரதிசயம் - ISRO-வுக்கு காத்திருந்த ஆச்சரியம் - என்ன தெரியமா?
நிலவின் தென்துருவப் பகுதியில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கிடைத்துள்ளது
சந்திரயான் 3
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஆண்டு சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் ஏவியது. இந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்தது.
இதனையடுத்து அதிலிருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. இந்நிலையில் சந்திராயன் 3 அனுப்பிய தகவல்களை ஆராய்ச்சி செய்ததில் நிலவின் தென்துருவப் பகுதியில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கிடைத்துள்ளது.
ஆய்வு முடிவு
சந்திராயன் 3 திட்டத்தின் தரவுகளை ஐஐடி கான்பூர், யூனிவர்சிட்டி ஆஃப் சதன் கலிபோர்னியா ஆகிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து இஸ்ரோவின் ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர் பிரிவு ஆராய்ச்சி செய்தது. இந்த ஆய்வு முடிவில், நிலவின் துருவப் பகுதிகளில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அந்த தண்ணீர் 5 முதல் 8 மீட்டர் ஆழத்தில் பனிக்கட்டிகளாக உறைந்து இருப்பதும் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இதனால் அடுத்த கட்டமாக சந்திரயான்- 4 திட்டத்தின் மூலம் தென் துருவத்தில் தரைப்பகுதியை துளையிட்டு ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.