50 ஆண்டுகளாக வற்றாத அதிசய கிணறு; ஃபில்டர் நீரை விட அதிக சுவை - எங்கு தெரியுமா?
50 ஆண்டுகளாக வற்றாத ஊட்டா பாவி என்ற கிணற்றை பற்றிய தகவல்.
ஊட்டா பாவி
தெலங்கானாவின் பெத்தப்பள்ளி மாவட்டம் ராமகுண்டத்தில் 'ஓ சாய்' என்ற ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலில் உள்ள கிணற்றை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு அருகிலிருந்த 30 கிராம மக்கள் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக பயன்படுத்தி வந்தனர்.
அப்போது இருந்த மக்கள் இந்த கிணற்றை 'ஊட்டா பாவி' என்று அழைத்து வந்தனர். அந்த காலத்தில் கோடைக்காலம் வந்துவிட்டால் கிணறுகள் முற்றிலும் வறண்டு விட்டாலும் இந்த கிணற்றில் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். ஆனால், ஒரு காலத்தில் பல கிராமங்களின் தாகத்தை தீர்த்த இந்த கிணற்றை, தற்போது யாரும் பயன்படுத்துவது இல்லை.
பயணிகள் விருப்பம்
காலப்போக்கில் நகரங்கள் வளர்ச்சியடைந்து, நகராட்சி அல்லது மாநகராட்சி மூலம் நல்ல தண்ணீரை வழங்கியதால், மக்கள் மனதிலிருந்து ஊட்டா பாவி மறைந்து விட்டது. இந்நிலையில் சாய் ஹோட்டலின் மேலாளர் இந்த கிணற்றை சுத்தம் செய்து பராமரித்து வருகிறார்.
இந்தக் கிணற்று தண்ணீரின் சுவை 50 ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்ததோ, அப்படியேதான் இன்றும் உள்ளது. ஃபில்டர் தண்ணீரை விட அதிக சுவையில் இருக்கும் ஊட்டா பாவியிலிருந்து தற்போது பயணிகள், வாகன ஓட்டிகள் தாண்ணீர் குடிக்க விரும்புவதாக மக்கள் கூறுகின்றனர்.