நீங்க single -ஆ இருக்கீங்களா? அப்போ தப்பிதவறி கூட இந்த விஷயங்களை பண்ணிடாதீங்க!
சிங்கள் வாழ்க்கையை தனிப்பட்டதாக வைத்திருப்பதால் ஏற்படும் நன்மைகளை குறித்து இந்த பதிவில் காணலாம்.
சிங்கள் வாழ்க்கை
நீங்கள் தனியாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறீர்கள் என்றால் உங்களது தனிப்பட்ட விவரங்களை மற்றவர்களுடன் கண்டிப்பாக பகிர்த்திருப்பீர்கள். அதே வேளை, தனியுரிமையைப் பின்பற்றுதல் மற்றும் உறவில் எல்லைகளை அமைப்பது தனியாக வாழ்பவர்களுக்கு மிக முக்கியம்.
மேலும், தனிப்பட்ட விவரங்கள், உறவுகளைப் பற்றி அந்தரங்கத் தகவல்களை வெளிப்படுத்துவது எதிர்காலத்தில் தீங்கு விளைவிக்கலாம். ஏனெனில், அனைவரையும் எளிதில் நம்ப முடியாது.
நாம் பகிரும் தகவலை நமக்கே எதிராகப் பயன்படுத்தக்கூடும். தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
உணர்ச்சி ஆரோக்கியம்
அந்தரங்க விவரங்களைப் பகிர்வது தேவையற்ற விமர்சனம் மற்றும் அறிவுரைகளுக்கு நீங்கள் ஆளாகலாம்.
இது உங்கள் உணர்வை பாதிக்கலாம் மன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள சில விஷங்களை பகிராமல் இருப்பது நல்லது.
பாதுகாப்பு உறுதி
தனிப்பட்ட வாழ்க்கை விவரங்களைப் பகிராமல் இருப்பதன் மூலம், அடையாளத் திருட்டு, சைபர்ஸ்டாக்கிங் மற்றும் பிற ஆன்லைன் சுரண்டல்களின் அபாயத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
மேலும், இதனால் உடல்ரீதியான தீங்கு அல்லது தனியுரிமையின் மீதான ஆக்கிரமிப்பிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும்.
அமைதியான மனம்
வாழ்க்கையைப் பற்றி அதிகமாகப் பகிர்வது உங்களை சோர்வடைய செய்யும். ஏனெனில் பிறருக்கு உங்கள் மீதான வுயூகமானது தவறாக ஏற்படலாம்.
எனவே, உறவுகளில் எல்லைகளை அமைப்பது நல்லது. ஆதன் படி, சமூக எதிர்பார்ப்புகள் மற்றும் அழுத்தத்திலிருந்து விடுவித்துக்கொள்ளலாம். இது அதிக உள் அமைதி தரும்
தவறான புரிதல்கள்
அந்தரங்க தகவல்களைப் பகிர்வது சில சமயங்களில் தவறான புரிதல்களுக்கும் தவறான விளக்கங்களுக்கும் வழிவகுக்கும்.
எனவே உங்கள் நம்பிக்கைக்குரியவர்களுக்கு மட்டும் குறிப்பிட்ட தகவலை வெளியிடுங்கள். இது தவறான தகவல் தொடர்புகளின் வாய்ப்பைக் குறைக்கும்.
சமூக ஒப்பீடு
உங்கள் வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிடுவது மிகவும் எளிதானது.
அந்த வலையில் சிக்காமல் இருக்க தனிப்பட்ட விவரங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்த்துவிடுங்கள்.