13 என்றாலே அலறும் மக்கள்; ஹோட்டலில் கூட அறை இல்லை - என்ன காரணம்?
ஹோட்டல்களில் 13 என்ற எண் அறை இல்லாத காரணம் குறித்த காரணத்தை இங்கு பார்க்கலாம்.
13 என்றால் ஏன் அச்சம்?
உலகம் முழுவதிலும் குறிப்பாக மேலை நாடுகளில் 13 என்ற எண்ணை கேட்டாலே பலரும் அச்சமடைகின்றனர். இதிலும் பலர் மாதத்தின் 13ம் தேதி வெள்ளிக்கிழமை என்றால் வீட்டினுள்ளே இருந்து விடுகின்றனர்.
உலகில் பல இடங்களில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் கட்டிடங்களில் கூட எண் 12க்கு அடுத்து 14ஆகதான் இருக்கின்றது. ஏனென்றால், மேற்கத்திய நாடுகளில் 13 என்ற எண் அபசகுணமாக பார்க்கப்படுகிறது.
ட்ரிஸ்கைடேகாபோபியா
இதற்கு முக்கிய காரணம் கிறிஸ்துவர்களின் மத போதகர் இயேசுவின் இறுதி விருந்தில் கலந்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை 13 எனப்படுகிறது. மேலும் இயேசு மரித்த நாளும் 13ம் தேதி வெள்ளிகிழமை என கூறப்படுகிறது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், 13 என்ற என் குறித்த பயம் தான் ட்ரிஸ்கைடேகாபோபியா (triskaidekaphobia) என்கின்றனர்.
இந்தியாவிலும் சில இடங்களில் உள்ள கட்டிடங்கள் மற்றும் ஹோட்டல்களில் 13 என்ற எண் கொண்ட அறையை காணமுடியாது.
இதுபோன்றே ஜப்பானில் 9, இத்தாலியில் 17 மற்றும் சீனாவில் 4 என்ற எண்கள் துரிஷ்ட எண்ணாக பார்க்கபடுவது குறிப்பிடத்தக்கது.