ஹோட்டல் ரூமில் ரகசிய கேமரா வைத்த ரூம் பாய்; அறையில் இளம்நடிகை - பரபரப்பு தகவல்!

Bollywood
By Sumathi Aug 23, 2023 06:42 AM GMT
Report

ஓட்டல் அறையில் ரகசியமாக கேமிரா பொருத்தப்பட்டிருந்ததாக நடிகை கீர்த்தி கர்பந்தா கூறியுள்ளார்.

கீர்த்தி கர்பந்தா

நடிகர் சுமந்த் ஜோடியாக 'போனி' என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி கர்பந்தா. ன்னர் 2010- ல் கன்னடத்திலும், 2016-ல் இந்தியில் வலம் வந்தார்.

ஹோட்டல் ரூமில் ரகசிய கேமரா வைத்த ரூம் பாய்; அறையில் இளம்நடிகை - பரபரப்பு தகவல்! | Kriti Kharbanda Reveal Secret Camera At Hotel Room

மேலும், பிரபல மாடலாகவும் திகழ்ந்து வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் ஜி.வி.பிரகாஷுடன் 'புருஸ் லீ' படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

 ரகசிய கேமிரா 

அதில், எப்போதுமே நானும் என் அசிஸ்டன்ட்டும் ஹோட்டல்களில் ரூம் புக் செய்தால் ரூமுக்குள் நுழைந்ததும் பாத்ரூம் மற்றும் படுக்கை அறை என அனைத்து இடங்களிலும் ரகசிய கேமராக்கள் இருக்கிறதா என்றும் ஏதாவது சந்தேகப்படக்கூடிய பொருட்கள் உள்ளனவா என்பதை பார்த்து விடுவோம்.

ஹோட்டல் ரூமில் ரகசிய கேமரா வைத்த ரூம் பாய்; அறையில் இளம்நடிகை - பரபரப்பு தகவல்! | Kriti Kharbanda Reveal Secret Camera At Hotel Room

அப்படி அன்று அந்த அறைக்குள் நுழைந்ததும் தேடிப் பார்த்ததில், செட் டாப் பாக்ஸ் கீழ் ஒரு ரகசிய கேமராவை ரூம் பாய் வைத்திருப்பதை கண்டுபிடித்து விட்டோம்.

நல்ல வேளை எந்தவொரு அந்தரங்க வீடியோக்களும் வெளியாகவில்லை என்பதை உணர்ந்து கொண்டு ஹோட்டலை விட்டே உடனடியாக காலி செய்து வேறு ஹோட்டலுக்கு சென்று விட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.