சர்ச்சை நடிகையை வைத்து 5 ஸ்டார் ஹோட்டலில் ஆபாச படம் எடுத்த பிரபல நடிகையின் கணவர் - வெளியான திடுக்கிடும் தகவல்...!
சர்ச்சை நடிகையை வைத்து 5 ஸ்டார் ஹோட்டலில் ஆபாச படம் எடுத்த பிரபல நடிகையின் கணவரைப் பற்றி பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா
நடிகை ஷில்பா ஷெட்டி பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் 'ரோமியோ', 'குஷி' படத்தில் நடித்துள்ளார். ஆபாச படங்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனால், அதிருப்தியில் இருந்து வந்த ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரை பிரிய முடிவு செய்ததாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ரா ஜாமீனில் வெளியே வந்தார்.
இவர் மீது மும்பை காவல் துறையினர் சுமார் 1400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது ராஜ்குந்த்ராவின் லேப்டாப், செல்போன் ஹார்ட் டிஸ்க்குகள் ஆய்வு செய்யப்பட்டன.
இந்த ஆய்வில் 119 ஆபாச வீடியோக்கள் இருந்ததும், அதை ரூ 9 கோடிக்கு விற்க திட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது.
5 ஸ்டார் ஹோட்டலில் ஆபாச படம்
இந்நிலையில், கடந்த வாரம் சைபர் பிரிவு போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது -
நடிகைகள் ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டே , பட தயாரிப்பாளர் மீத்தா ஜுன்ஜுன்வாலா, கேமராமேன் ராஜு துபே ஆகியோருடன் சேர்ந்து மும்பையில் இருக்கும் இரண்டு 5 ஸ்டார் ஹோட்டல்களில் ஆபாச படப்பிடிப்பை ராஜ் குந்த்ரா நடித்தியுள்ளார்.
இதனையடுத்து, அந்த ஆபாச படங்களை ஓடிடியில் வெளியிடும் எண்ணத்தில் தான் ராஜ் குந்த்ரா எடுத்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு மாலத் தீவில் இருக்கும் பங்களா ஒன்றில் நடந்த அதிரடி ரெய்டுக்கு பிறகே ராஜ் குந்த்ரா ஆபாச படங்கள் எடுத்தது தெரிய வந்தது.
பூனம் பாண்டே, தி பூனம் பாண்டே என்கிற மொபைல் ஆப்பை உருவாக்கி வந்துள்ளார். அதை ராஜ் குந்த்ராவின் நிறுவனம் மூலம் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளார். இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.