ஆண்களுக்கு ஏன் வயதில் மூத்த பெண்களை பிடிக்கிறது? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
ஆண்களுக்கு ஏன் வயது கூடுதலாக இருக்கும் பெண்கள் மீது காதல் ஏற்படுகிறது என்பதை குறித்து காணலாம்.
ஆண்களின் ஈர்ப்பு
ஒரு சில ஆண்களுக்கு குறிப்பிட்ட பெண்கள் மீது ஈர்ப்பு மட்டுமே ஏற்படும். அப்படி ஒரு வகையான ஈர்ப்பு தான் மூத்த பெண்கள் மீது ஏற்படும் பிரியம்.
குறிப்பாக தங்களை விடவும் வயதில் குறைந்த பெண்கள் அல்லது சம வயது பெண்களுடன் ஒப்பிடும்போது வயது மூத்த பெண்களிடம் ஆண்கள் எதிர்ப்பார்க்கும் சில விஷயங்களான, சுதந்திரமாக செயல்படுவது, மெச்சூரிட்டி, சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் இருப்பதாக கூறுகின்றனர்.
இதுபோன்ற காரணங்களுக்காக பல ஆண்கள் தங்களை விட வயதில் மூத்த பெண்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள். குறிப்பாக, கடினமான, சூழலில் ஆண்களை எதிர்பாராமல் எளிதாக அதனை சரி செய்யும் தன்மை வயதான பெண்களிடம் இருப்பதால் அனைவரும் வயது வித்தியாசம் பார்க்காமல் காதலில் விழுகிறார்கள்.ஆனால், எல்லா ஆண்களும் அப்படி இல்லை.
மெச்சூரிட்டி
வயது மூத்த பெண்களிடம் ஆண்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் மெச்சூரிட்டி தான்.
தனது மனதில் நினைப்பதை எளிதாக வெளிப்படுத்துவது, வெளிப்படையாக உரையாடுவது ஆகியவற்றில் கை தேர்ந்தவர்கள்.
தன்னம்பிக்கை
தன் மீதும், தனது திறமை மீதும் அதிக தன்னம்பிக்கை உடைய ஆண்கள் வயதான பெண்ணை காதலிக்க தயங்கமாட்டார்கள்.
தான் எப்படி இருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டு மிகவும் சௌகரியமான உணர்வை தர கூடிய பெண்கள் மீது காதல் வயப்படுவார்கள்.
சுதந்திரம்
வயதில் மூத்த பெண்களை விரும்பும் ஆண்களுக்கு சுதந்திரமாக இருப்பதை மிகவும் விரும்புவார்கள்.
தனிமையை விரும்பும் இவர்கள், மற்றவர்களுடன் ஜாலியாகப் பழகுவார்கள். தன்னை எவ்விதத்திலும் தடை செய்யாமல் இருப்பது போன்ற குணங்கள் தான், சுதந்திரமாக இருக்கும் மூத்த பெண்ணை நேசிக்க தூண்டுகிறது.
எமோஷனல் இன்டலிஜன்ஸ்
கடினமான உணர்வுகளையும், உறவுகளுக்குள் ஏற்படக்கூடிய சிக்கலான விஷயங்களையும் மூத்த பெண்களை விரும்பும் ஆண்களால் சுலபமாக ஹேண்டில் செய்து, சரியாக தீர்வு காண முடியும்.
அதற்கு ஏற்ற போல் நடந்துகொள்வதிலும் பிறர் உணர்வுகளை புரிந்து கொள்வதில் மூத்த பெண்களுக்கு வல்லமை அதிகம்.
மரியாதை
பொதுவாகவே எந்த உறவாக இருந்தாலும் அதில் அன்பும் மரியாதையும் இருக்க வேண்டும். வயதில் மூத்த பெண்களை விரும்பும் ஆண்கள் அலாதியான மரியாதையை வைத்திருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களிடத்தில் மரியாதையாக நடப்பார்கள் மற்றவர்களையும் மரியாதையாக நடத்துவார்கள் கோபம், சண்டை போன்ற எதுவாக இருந்தாலுமே அதனை சரி செய்ய முயற்சி செய்வார்கள்.