பெண்களுக்கு தாடி வைத்த ஆண்களை அதிகம் பிடிப்பது ஏன்? ஆய்வில் வெளியான உண்மை!
பெண்களுக்கு தாடி வைத்த ஆண்களை அதிகம் பிடிப்பது ஏன் என்பதை இந்த பதிவில் காணலாம்.
தாடி வைத்த ஆண்கள்
பெண்கள் எந்த ஆண்களை நோக்கி அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை அறிய உலகில் எப்போதும் ஆர்வத்துடன் தான் உள்ளது. பொதுவாகவே ஒரு பெண் எதனால் ஆணை நோக்கி ஈர்க்கப்படுகிறாள்?என புரிந்து கொள்ள அறிவியல் ஆராய்ச்சியும் நடந்தன.
இதுகுறித்து மானுடவியலாளரும் சிறந்த எழுத்தாளருமான ஹெலன் ஈ. ஃபிஷர் கூறுகையில், உலகம் முழுவதும் உள்ள பெண்கள் வெளிப்பாடுகளின் அடிப்படையிலேயே ஒருவர் மீது விருப்பம் காட்டுகிறார்கள். முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் ஆண்கள் அவர்களை ஈர்க்கவே மாட்டார்கள்.
இதன் பொருள் என்னவென்றால், ஆண்கள் தங்களைப் புரிந்துகொண்டு தாங்கள் சொல்வதைக் கவனிக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். எல்லா வகையான விஷயங்களையும் சொல்ல அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.
பிடிப்பது ஏன்?
விலையுயர்ந்த ஆடைகளை அணிந்துகொண்டு ஆடம்பரமான கார்களை ஓட்டும் ஆண்களே பெண்களின் விருப்பத்திற்குரியவர்களாக இருக்கிறார்கள் என்று நம்பிய காலம் எல்லாம் போய்விட்டது. நீங்கள் சைக்கிள் ஓட்டினாலும் அவர்களுக்கு கவலையே இல்லை என்கிறது ஒரு ஆய்வு.
உங்கள் ஆளுமை உங்கள் முகத்தில் பிரதிபலிக்கிறது. அவர்களைக் கவரும் ஏதோவொன்று உங்கள் ஆளுமையில் இருக்க வேண்டும். அது உங்களின் அப்பாவி முகமாகவும் கூட இருக்கலாம். நீங்கள் எளிமையான ஆடைகளை அணிந்திருந்தாலும், அதில் உங்களுக்கு ஏற்ற ஸ்டைல் இருக்க வேண்டும்.
அதாவது, கடந்த 2010ம் ஆண்டு நடத்திய ஆய்வில் பெண்கள் பெரும்பாலும் வயதான ஆண்களையே விரும்புவதாகக் தெரிந்தது. கடந்த 2013ம் ஆண்டு நடத்திய ஆய்வில், முழுமையாக ஷேவ் செய்யப்பட்ட முகம், லேசான தாடி, அடர்த்தியான தாடி அல்லது முழுமையான தாடியின் கவர்ச்சி குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வெளியான உண்மை
லேசான தாடியுடன் இருப்பவர்களே மிகவும் கவர்ச்சிகரமான ஆண்கள் என பெண்கள் கூறினார்கள். இப்போதெல்லாம் லேசாக தாடி வைப்பது உலகளாவிய ஆண்கள் மத்தியில் டிரெண்டாக உள்ளது. மேலும், பெண்கள் கனிவான,மென்மையான குணம் கொண்ட ஆண்களை அதிகம் விரும்புகின்றனர்.
பொதுவாக பெண்கள் தங்களிடம் கண்ணியமாகவும் அக்கறையுடனும் நடந்துகொள்ளும் அண்களையே எப்போதும் விரும்புவார்கள். அதேபோல, தங்களை சிரிக்க வைக்கும் ஆண்களையே பெண்கள்
அதிகம் விரும்புவதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தன்னை சிரிக்க வைக்கும் ஆண்கள் வாழ்க்கையைப் பற்றிய நேர்மறையான எண்ணங்களையும் கொண்டவர்களாக பெண்களுக்கு தெரிகிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.