நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் ? அண்ணாமலை கொடுத்த விளக்கம்!
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு அச்சம் அதனால் தான் அவர் பங்கேற்கவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கமலாலயம்
சென்னை தி.நகர் கமலாலயத்தில் தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி எழுதிய ‘கனெக்டிங் 1.4 பில்லியன்’ புத்தகம் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, ‘பாலம்’ கல்யாணசுந்தரம், கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டனர்.பின்னர் செய்தியாளர்களை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.
முதல்வருக்கு அச்சம்
அப்போது பேசிய அவர்,'' இது மோடியின் 10ஆண்டு கால ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், அவற்றால் ஏற்பட்ட வளர்ச்சி, மாற்றங்கள், தாக்கங்கள் குறித்து இந்த புத்தகத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க்காதது குறித்த செய்தியாளர் கேள்விக்கு,'' மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்துள்ளதாக கூறி டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளார் .
ஆனால் அது உண்மையான காரணம் இல்லை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு அச்சம் அதனால் தான் அவர் பங்கேற்கவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.