லண்டன் செல்லும் அண்ணாமலை; இவ்வளவு மாதமா? தமிழக பாஜகவுக்கு தலைவர் மாற்றம்!
அரசியல் படிப்புக்காக அண்ணாமலை லண்டன் செல்லவுள்ளார்.
அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் படிப்புக்காக வருகிற செப்டம்பர் மாதம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் லண்டன் செல்லவுள்ளார்.
பல்கலைக்கழகத்தின் மூலம் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 12 பேரில் அண்ணாமலையும் ஒருவராக உள்ளார். அங்கு செல்லும் அண்ணாமலை 6 மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பார் எனக் கூறப்படுகிறது.
அரசியல் படிப்பு
இதனால் கட்சி பணிகள் தொய்வடையும் என்பதால், தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் மோசமான தோல்வியால், கட்சியை பலப்படுத்த வேறு தலைவர் நியமிக்கப்படலாம் எனக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.