தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சொத்துமதிப்பு விவரம்.
மக்களவை தேர்தல்
2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழக தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
சொத்து மதிப்பு
இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் பாஜக முக்கிய தலைவர்களும் தொண்டர்களும் இருந்தனர்.
அண்ணாமலையிடம் அசையும் சொத்து ரூ.36 லட்சமும், அசையா சொத்து ரூ.1.12 கோடியும் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரின் மனைவி அகிலாவின் பேரில் ரூ.2 கோடி மதிப்பிலான அசையும் சொத்தும், ரூ.53 லட்சம் மதிப்பிலான அசையா சொத்தும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.