மக்களவை தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு - டிடிவி தினகரன் எந்த தொகுதியில்?

Tamil nadu BJP TTV Dhinakaran Election Theni
By Jiyath Mar 24, 2024 06:43 AM GMT
Report

பாஜக கூட்டணியில் அமமுக போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.   

மக்களவை தேர்தல்

2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

மக்களவை தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு - டிடிவி தினகரன் எந்த தொகுதியில்? | Ammk Candidates Ttv Dhinakaran In Theni

இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழக தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

40 நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிமுகம்; களமிறங்கும் வீரப்பன் மகள் - எந்த தொகுதியில்?

40 நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிமுகம்; களமிறங்கும் வீரப்பன் மகள் - எந்த தொகுதியில்?

அமமுக வேட்பாளர்கள்   

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக. கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அமமுக சார்பில், தேனி தொகுதியில் டிடிவி தினகரனும்,

மக்களவை தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு - டிடிவி தினகரன் எந்த தொகுதியில்? | Ammk Candidates Ttv Dhinakaran In Theni

திருச்சி தொகுதியில் செந்தில்நாதனும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும் அதிமுக சார்பில் வி.டி நாராயணசாமியும் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.