விஜய்யுடன் பணியாற்ற தயார் - த.வெ.க-வில் இணைகிறாரா ஓபிஎஸ் மகன்?
நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற தாங்கள் தயாராக இருப்பதாக எம்.பி. ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
ஓ.பி.ரவீந்திரநாத்
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்.பி.யுமான ரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்த தேர்தல் அதிமுக, அமமுக, ஓபிஎஸ் அணியின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய தேர்தலாக நிச்சயம் அமையும்.
ராமநாதபுரத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஓபிஎஸ் வெல்வார். இதை நீங்கள் எழுதி வச்சிக்கோங்க. அது போல் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் டிடிவி தினகரனும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார்.
பணியாற்ற தயார்
யார் மக்கள் சேவை செய்தாலும் அது நல்ல விஷயம்தான். அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியாக விஜய் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். தமிழக மக்களுக்கு நல்ல ஒரு பாதையை வகுத்து தந்தால் அவருடன் இணைந்து பணியாற்றவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
போடி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால் நான் போட்டியிட வாய்ப்பிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி சுயநலத்தால் கட்சியை அபகரித்துக் கொண்டார். நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு அவரால்தான் பறிபோனது" என்று தெரிவித்துள்ளார்.