விராட் கோலியை நான் எதுக்கு வாழ்த்தணும்..? சிரித்தபடியே கொந்தளித்த இலங்கை கேப்டன்!
விராட் கோலி சதம் விளாசியதற்கு நான் எதற்காக வாழ்த்து கூற வேண்டும் என்று இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
விராட் கோலி சதம்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இந்தியா-தென்னாப்பிரிக்க இடையேயான போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி 121 பந்துகளில் 101 ரன்கள் விளாசி ஒருநாள் போட்டியில் தனது 49வது சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார்.
இந்த சதத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். இதனையடுத்து சதம் விளாசி தனது சாதனையை சமன் செய்துள்ள விராட் கோலிக்கு, சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்தார். மேலும், ரசிகர்கள் உட்பட பல கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நான் எதற்கு வாழ்த்தணும்?
இந்நிலையில் நேற்று மாலையில் டெல்லியில் இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டிஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடம் "விராட் கோலி 49வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
அவருக்கு நீங்கள் வாழ்த்து கூற விரும்புகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு குசல் மெண்டிஸ், இன்னொரு முறை கேள்வியை கேளுங்கள் என்று கூறினார். அப்போது பத்திரிக்கையாளர் மீண்டும் அதே கேள்வியை எழுப்பினார். அதற்கு குசல் மெண்டிஸ் "நான் எதற்கு விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவிக்கனும்? என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
பின்னர் அருகில் இருந்தவர்களையும் பார்த்து அவர் சிரித்தார். இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்கள் பலரும் குசல் மெண்டிஸை விமர்சித்து வருகின்றனர்.
Journalist " Virat Just scored his 49th ODI ton. Do you like to congratulate him?"
— Out Of Context Cricket PK (@GemsOfCrickett) November 5, 2023
Kusak Mendis" Why I would congratulate him"???#INDvSA #INDvsSA #SAvIND #ViratKohli #CWC2023 pic.twitter.com/DAqh2oeO5e