இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அமைச்சர் அதிரடி உத்தரவு - என்ன நடந்தது?
இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி அதில் 2 போட்டிகளில் மட்டுமே இலங்கை வெற்றி பெற்றுள்ளது.
மேலும், அறையிருதி வாய்ப்பையும் இழக்கும் விளிம்பு நிலையில் இலனாகி அணி உள்ளது. இதனால் அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். முன்னதாக இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 55 ரன்களில் இலங்கை சுருண்டது. அந்த போட்டியில் 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.
கிரிக்கெட் வாரியம் கலைப்பு
இந்நிலையில் உலகக்கோப்பையில் தொடர் தோல்வி எதிரொலியாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக தலைவராக அர்ஜுனா ரணதுங்கா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட 7 பேர் இடம்பெற்றுள்ளனர். ஊழல், நிதி முறைகேடு , சூதாட்டம் மற்றும் வீரர் ஒழுங்கீனம் எனக் குறிப்பிட்டு ஐசிசிக்கு இலங்கை அமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.