விமானப் பணிப்பெண்கள் ஏன் ஹை ஹீல்ஸ் அணிகிறார்கள் தெரியுமா?
விமான பணிப்பெண்கள் ஏன் ஹீல்ஸ் அணிகிறார்கள் என்ற காரணத்தை தெரிந்துகொள்ளலாம்.
விமான பணிப்பெண்கள்
நீங்கள் விமானத்தில் சென்றிருந்தால், விமானப் பணிப்பெண்கள் மற்றும் அவர்களின் உடையை கவனித்திருக்கலாம். பெரும்பாலான விமானப் பணிப்பெண்கள் தங்கள் சீருடையுடன் ஹை ஹீல்ஸ் செருப்புகளை அணிந்திருப்பார்கள்.
ஏனென்றால், 1966 மற்றும் 1976-க்கு இடைபட்ட காலத்தில் பசிபிக் சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸில் மினி ஸ்கர்ட்டுகள் அணிந்திருக்கும் பணிப்பெண்கள் மிகவும் பிரபலம்.
ஹை ஹீல்ஸ்
இந்தப் பெண்கள் தங்கள் சீருடையுடன் ஹீல்ஸ் அணிய வேண்டும். விமான நிறுவனத்திற்கு ஆண் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அன்றைய காலத்தில் வியாபாரம் நிமித்தமாக ஆண்கள் விமானத்தில் அதிகம் பயணம் செய்துள்ளனர்.
தற்போது விமானப் பணிப்பெண்கள் ஹீல்ஸ் அணிவார்களா இல்லையா என்பது வெவ்வேறு விமான நிறுவனங்களைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.